Print
பல்கலைக்கழக விவரம்
பல்கலைக்கழக பெயர் பாரதியார் பல்கலைக்கழகம்
நகரம் கோயம்புத்தூர்
மாவட்டம் தமிழ்நாடு
அஞ்சல் குறியீட்டு எண்
ஆய்வாளர் விவரம்
ஆய்வாளர் பெயர் இரா. சுஜாதா (கோயமுத்தூர்)
நகரம் கோயமுத்தூர்
ஆய்வு விவரம்
தலைப்பு ராய. சொக்கலிங்கத்தின் தமிழ்ப்பணி
வகைமை பங்கும் பணியும்
துணை வகைமை தனிஆள்ஆய்வு
பதிவு நாள் 2006
நெறியாளர் மஞ்சுளா கனகராஜ்
துணை நெறியாளர் மஞ்சுளா கனகராஜ்
ஆய்வு விளக்கம்
முன்னுரை
தமிழ் இலக்கிய உலகில் தன் படைப்பில் தமிழ் உள்ளங்களைத் தன் வயப்படுத்திய ராய. சொக்கலிங்கம் தமிழ்மொழிக்கு ஆற்றியிருக்கும் பங்கும் பணியும் எத்தகையது எனக் காண்பதே இவ்வாய்வின் நோக்கமாக அமைகிறது.
ஆய்வு அணுகுமுறை
பகுப்பாய்வு, விளக்க அணுகுமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளன
கருதுகோள்
இல்லை
ஆய்வுப் பகுப்பு
இவ்வாய்வேடு, 1. செய்யுள்பணி 2. உரைநடைப்பணி 3. ஆராய்ச்சிப் பணி 4. பதிப்பு, தொகுப்புப்பணி 5. இதழியல் பணி ஆகிய இயல்களைக் கொண்டது.
முடிவுரை
ராய. சொ. பல்நோக்குத்திறன் உடையவராய் விளங்குகின்றார். இவரின் கவிதைகளில் புரட்சிக் கருத்துக்களும், பெண் உரிமையும், நாட்டுப்பற்றும், மொழிப்பற்றும், மக்களியமும் பேசப்படுகின்றன. செய்யுள் நூல்கள் அனைத்தும் காந்தியின் மீது கொண்டுள்ள பக்தியின் வெளிப்பாடாகவே அமைந்துள்ளது கண்டறியப்பட்டது. தீண்டாமை அகற்றுதல், மதுவிலக்கு, கைத்தொழிலன் மேன்மை, பஞ்சாயத்துதறை போன்றவைகளும் இவரது கவிதைகளில் சிறப்பிடம் பெறுகின்றன. இவரது உரைநடை நூல்கள் இயற்கை அழகையும், வாழ்க்கை அறங்களையும் கூறுவதாக அமைந்துள்ளன. உரைநடையின் முக்கியக் கூறுகளான கருத்துச் சிறப்பு, சொல் தேர்ச்சி, மொழிநடை ஆகியன எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. பிறமொழிக் கலப்பின்றி, தமிழ் சொற்களால் ஆன ஆற்றொழுக்கு நடையினைப் பின்பற்றியுள்ளார்.