Print
பல்கலைக்கழக விவரம்
பல்கலைக்கழக பெயர் பாரதியார் பல்கலைக்கழகம்
நகரம் கோயம்புத்தூர்
மாவட்டம் தமிழ்நாடு
அஞ்சல் குறியீட்டு எண்
ஆய்வாளர் விவரம்
ஆய்வாளர் பெயர் சி. தீபா
நகரம் கோபிசெட்டிப்பாளையம்
ஆய்வு விவரம்
தலைப்பு புலவர் வே.ரா. தெய்வசிகாமணிக் கவுண்டர் அவர்களின் ஏடு பெயர்ப்பும் நூல் படைப்பும்
வகைமை பங்கும் பணியும்
துணை வகைமை தனிஆள்ஆய்வு
பதிவு நாள் 2008
நெறியாளர் கு. மகுடீஸ்வரன்
துணை நெறியாளர் கு. மகுடீஸ்வரன்
ஆய்வு விளக்கம்
முன்னுரை
பெரும்புலவர் திரு. வே. ரா. தெய்வசிகாமணிக்கவுண்டர் அவர் சிறந்த புலவர், பதிப்பாளர், உரைநடையாளர், அவருடைய தமிழ்த்தொண்டு அனைவரும் அறிய வேண்டிய ஒன்றாகும்.
ஆய்வு அணுகுமுறை
பகுப்பாய்வு அணுகுமுறை, ஒப்பாய்வு அணகுமுறை
கருதுகோள்
இல்லை
ஆய்வுப் பகுப்பு
இவ்வாய்வேடு, 1. புலவரின் பெருவாழ்வு 2. புலவரின் சுவடி தேடலும், பதிப்புப் பணிகளும் 3. புலவரின் செய்யுட் பணிகள் 4. புலவரின் உரையும், உறைநடைப்பணிகளும் 5. புலவரின் ஆய்வுகளும், முடிவுகளும் ஆகிய இயல்களைக் கொண்டது.
முடிவுரை
பரம்பரைப் புலவர் வீடு, கேள்விப்பட்ட இடங்களுக்கெல்லாம் புலவர் சென்று ஏடுகளைத் தேடிச் சேகரித்துள்ளனர். தேடிய சுவடிகளைச்சிலர் வாங்கிச் சென்று, திருப்பித்தராதும் இருந்துள்ளனர். அவர் முப்பது சுவடிகளைப் புலவர் அவர்கள் பிதிப்பித்துள்ளார். அவற்றுள் ‘மஞ்சமரபு’ எனும் நூலைப் பதிப்பித்து குறிப்பிடத்தக்கதாகும் அதனால் கொங்கு நாடும் இசைவடிவம் கொண்டது எனப் பெயர்பெற்றது. பொதுவாகப் புலவரின் சுவடிப்பதிப்புகள்: விரிவான முன்னுரை, குறிப்புரை, அடும்பதிவுதுறை விளக்கம் ஆகியவற்றுடன் அமைந்தன. பஞச்மரபு 334 பாக்களையுடையது. அதில் 224 பக்கங்கில் குறிப்புகள் விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. தலபுராணங்களில் நூல் ஆராய்ச்சி, நூலாசிரியர் பற்றிய குறிப்பு, தல சரித்துரக் குறிப்பு, திருப்பணி செய்த அடியவர்கள் பற்றிய செய்திகள் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன. சுவடிப் பதிப்பில் இன்றியமையாதது, பல சுவடிகளைக் கொண்டு ஒப்பு நோக்கைத் தவறின்றிப் பதிப்பித்தலாகும். புலவர் இவ்வகையில் சுவடிகளைச் சிறப்புடன் ஒப்பு நோக்கிப் பதிப்பித்துள்ளார். சென்னிமலைத் தலபுராணச் சுவடிகள் 2. மொழி விளக்கம் -2, கல்வியொழுக்கம் - பல, முனிமொழி – 3. கொங்குமண்டல சதகம்ம எனப்பல சுவடிகளைக் கொண்டே அந்நூல்களை ஒப்பு நோக்கிப்பதிப்பித்துள்ளார்.