Print
பல்கலைக்கழக விவரம்
பல்கலைக்கழக பெயர் அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
நகரம் அண்ணாமலை நகர்
மாவட்டம்
அஞ்சல் குறியீட்டு எண் 608 002.
ஆய்வாளர் விவரம்
ஆய்வாளர் பெயர் அ. கணேசன்
நகரம் சிதம்பரம்
ஆய்வு விவரம்
தலைப்பு சிற்றிலக்கியங்களில் சோதிடம்
வகைமை சிற்றிலக்கியங்கள்
துணை வகைமை பொது
பதிவு நாள் 2005
நெறியாளர் அ. சிவபெருமான்
துணை நெறியாளர் அ. சிவபெருமான்
ஆய்வு விளக்கம்
முன்னுரை
சிற்றிலக்கியங்களில் சோதிடம் என்னும் தலைப்பில் இவ்வாய்வேடு மேற்கொள்ளப்படுகிறது.
ஆய்வு அணுகுமுறை
இவ்வாய்வேடு விளக்கமுறை, ஒப்பீட்டு அணுகுமுறைகளைப் பின்பற்றியுள்ளது.
ஆய்வுப் பகுப்பு
இவ்வாய்வேடு முன்னுரை, முடிவுரை நீங்கலாக நான்கு இயல்களைக் கொண்டது. அவை, 1. சிற்றிலக்கியங்கள் - பன்முகப் பார்வை 2. சோதிடவியல் ஓர் அறிமுகம் 3. சதக இலக்கியங்களில் சோதிடம் 4. கோவை இலக்கியங்களில் சோதிடம் என்பனவாகும்.
முடிவுரை
சிற்றிலக்கிய வகைகளால் சோதிடமும் ஓர் இலக்கிய வகையாகும். பன்னிருபாட்டியல், முத்துவீரியம், பிரபந்த தீபிகை ஆகிய பாட்டியல் நூல்கள் சோதிடக்கலையை ஓர் இலக்கிய வகையாக்குறித்துள்ளன. பாட்டுடைத் தலைவனுக்கு சாதகம் பார்த்தல் என்னும் வழக்கத்தையொட்டி இவ்விலக்கியம் தோன்றியிருக்கலாம். பாட்டியல் நூல்கள் சாதக இலக்கிய வகைக்கு இலக்கணம் கூறியிருப்பதை நோக்குமிடத்து அக்காலத்தில் சாதகம் எழுதுதல் ஓர் இலக்கிய வகையாக இருந்திருக்கலாம் எனக் கருதமுடிகின்றது. மேற்குறித்த மூன்று பாட்டியல் நூல்களும் ஏழு உறுப்புகள் என்ற எண்ணிக்கையில் இருபத்தொரு உறுப்புகளைக் குறித்துள்ளன. இவ்விருவத்தொரு உறுப்புகளுள் பயின்று உறுப்புகளே மீண்டும் வந்துள்ளதால் அவற்றை நீக்கிவிடின் பதினைந்து உறுப்புகள் கிடைக்கும்.