ஆய்வு விவரம் தேடல்
சங்க இலக்கியத்தில் மலைவளம் - ம. தங்கராசு
பல்கலைக்கழக விவரம்
பல்கலைக்கழக பெயர் சென்னைப் பல்கலைக்கழகம்
நகரம் சென்னை
மாவட்டம் தமிழ் நாடு
அஞ்சல் குறியீட்டு எண் 6000005
ஆய்வாளர் விவரம்
ஆய்வாளர் பெயர் ம. தங்கராசு
நகரம் சென்னை
ஆய்வு விவரம்
தலைப்பு சங்க இலக்கியத்தில் மலைவளம்
வகைமை சங்க இலக்கியம்
துணை வகைமை பொது
பதிவு நாள் 2013
நெறியாளர் சீ. மங்கையர்க்கரசி
துணை நெறியாளர் சீ. மங்கையர்க்கரசி
ஆய்வு விளக்கம்
முன்னுரை
இலக்கியம் என்பது என்றும் மாறாத விழுமிய பயனுடைய நூல்களின் தொகுதியைக் குறிக்கும். ஒரு நாட்டுக்கு இலக்கியத்தைப் போல் அழியாப் பெருமை தருவது வேறு எதுவுமில்லை. உண்மையில் மாசு மருவற்ற இலக்கிய உயர்வு ஒரு நாட்டை அழியா நாடாக்கும் என்பதில் ஐயமில்லை. அவ்வகையான இலக்கியங்களில் சங்க இலக்கியம் என்றும் அழியாப் புகழுடைய இலக்கியமாக உள்ளமைக்குச் சங்க இலக்கியச் சிறப்புகள் குறித்த ஆயிரக்கணக்கான நூல்களுள், இவ்விலக்கியம் பற்றி வெளிவந்த பல்வேறு வகையான ஆய்வுகளுமே சான்றாகும். சங்க இலக்கியம் என்பது தொகையும், பாட்டும் ஆகும். எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்கள் என்றும் கூறுவர். அகம் சார்ந்த வாழ்க்கையையும், புறம் சார்ந்த வாழ்க்கையையும், இயற்கையோடு இயைந்த வாழ்க்கையாகத் தமிழர் வாழ்ந்தமையைக் காட்டுவதாக இவ்விலக்கியங்கள் விளக்குகின்றன. ஐவகை நிலங்களான குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய நிலங்களில் முதல், கரு, உரிப்பொருள் பற்றிய கருத்துக்களையும் அதன் வழி தமிழரின் வாழ்வையும் வாழ்க்கை முறையையும் பண்பாட்டு நெறிகளையும் இவ்விலக்கியம் அறியச் செய்கின்றது.
ஆய்வு அணுகுமுறை
இல்லை
ஆய்வுப் பகுப்பு
இவ்வாய்வேடு முன்னுரை, முடிவுரை நீங்கலாக ஐந்து இயல்களைக் கொண்டுள்ளது. அவை, 1. மலை நிலம் 2. மலைநில மக்களின் வாழ்வியல் 3. மலைநில மக்களின் பண்பாடு 4. மலைநில மக்களின் தொழிலியல் 5. மலைநில மக்களின் விளையாட்டுகள் என்பனவாகும்.
முடிவுரை
சங்க காலம் வீரம் சிறந்த காலம், விவேகம், நிலைந்தக்காலம், அன்பும், அறமும், காதலும் இணைந்தகாலம். இல்லறப் பண்புகளாக விருந்தோம்பல் செழித்த காலம். செல்வத்துப் பயனே ஈதல் என்பதனை வாழ்வியல் நெறியாகக் கொண்ட காலம். புலமைக்கு மதிப்பளித்த காலம், புலமையுள்ளோரைப் போற்றிய காலம். இத்தகு சீரும் சிறப்பும் பெற்ற சங்கத் தமிழர்கள் அரிய பண்பு நலனும், சமூக அக்கறை உணர்வும் கொண்டவர்களாக விளங்கினர். தங்கள் வாழ்க்கையில் மலையினையும், மலையில் கிடைத்த பொருட்களையும் தங்கள் வாழ்க்கையில் திறம்படப் பயன்படுத்திக் கொண்டனர் என்பதற்கு சங்கப் பாடல்களே சான்றாக அமைகின்றன. இயற்கையோடு இயைந்த வாழ்க்கை வாழ்ந்த மலை மக்கள், இயற்கையாக உருவெடுத்த மலைகளைத் தங்கள் வாழ்க்கைக்கு ஏற்ப மாற்றம் செய்து பயன்படுத்திக் கொண்டனர். அம்மலையின் தன்மைக்கு ஏற்ப அவற்றிற்கு சங்க இலக்கியங்கள் குன்று, பறம்பு, சிலம்பு, சாரல், ஓங்குமலை ,பெருவரை எனப்பெயரிட்டனர். அப்பெயர்வழியே அம்மலையின் தன்மையினை பெயர்களால் அறியலாம் அங்கு வாழ்ந்த மக்களின் நிலப்பாகுபாடுகள் பற்றி சங்க இலக்கிய நூல்களிலும் தொல்காப்பியத்திலும் , புலவர்கள் இவற்றின் சிறப்பினை எடுத்துக்காட்டியுள்ளதும், சான்றாக அமைகின்றன என்பதற்கான சான்றாதாரங்களைத் தொகுத்தும், பகுத்தும் எடுத்துரைக்கின்றது.
விருட்சம் கவிதைகள் - ஓர் ஆய்வு - பெ. கயல்விழி
கல்லூரி விவரம்
கல்லூரி பெயர் உருமு தனலட்சுமி கல்லூரி
பல்கலைக்கழக பெயர் பாரதிதாசன் பல்கலைக்கழகம்
நகரம் திருச்சி
மாவட்டம் காட்டூர்
அஞ்சல் குறியீட்டு எண்
ஆய்வாளர் விவரம்
ஆய்வாளர் பெயர் பெ. கயல்விழி
நகரம் திருச்சிராப்பள்ளி
ஆய்வு விவரம்
தலைப்பு விருட்சம் கவிதைகள் - ஓர் ஆய்வு
வகைமை இக்காலஇலக்கியங்கள்
துணை வகைமை கவிதை
பதிவு நாள் 2002
நெறியாளர் க. சண்முக சுந்தரம்
துணை நெறியாளர் க. சண்முக சுந்தரம்
ஆய்வு விளக்கம்
முன்னுரை:-
தமிழ்கவிதை வளமான வரலாற்றைக் கொண்டது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களின் தமிழ்க் கவிதையின் கட்டுக்கோப்பான இலக்கண மரபு புலனாகிறது. செய்யுள் இலக்கணம் பற்றிய தெளிவான கருத்துக்களைத் தொல்காப்பியம் கூறுகிறது. கவிதையின் உள்ளடக்கம், வடிவம் ஆகிய இரண்டைப் பற்றியும் தமிழ் இலக்கணங்கள் விரிவாக எடுத்துரைக்கின்றன. தொல்காப்பியம், யாப்பருங்கலக்காரிகை, தண்டியலங்காரம், நன்னூல் ஆகியனவெல்லாம் இலக்கதியத்தின் பல்வேறு கூறுபாடுகளைப் பற்றியே ஆராய்கின்றன.
ஆய்வேட்டின் அமைப்பு:-
இவ்வாய்வு முன்னுரை, நீங்கலாக ஆறு இயல்களாகப் பகுக்கப்பட்டுள்ளது. 1. இதுவரை புதுக்கவிதை 2. விருட்சம் கவிதைகளில் தனிமனித உணர்வுகள் 3. சமுதாய சிந்தனைகள் 4. இயற்கை ஈடுபாடுகள் 5. கவிதை உத்திகள் 6. முடிவுரை
முடிவுரை:-
‘விருட்சம்’ இதழ்க் கவிதைகள் ‘எழுத்து’ மரபைச் சார்ந்தனவாக உள்ளன. யாப்பிலக்கணக் கட்டுபாடுகளற்ற புதுக் கவிதைகளாகவே அனைத்துக் கவிதைகளும் அமைந்துள்ளன. வழக்கான புதுக்கவிதை உத்திகளோடு, சில புதிய உத்திகளைப் பயன்படுத்தியிருப்பதன் வாயிலாகத் தமிழ்ப் புதுக்கவிதையின் வளர்ச்சிக்கு ‘விருட்சம்’ உதவியுள்ளது. தனிமனிதன் சமுதாயம், அரசியல் இயற்கை என்று மக்கள் தொடர்புடைய பாடு பொருள்களை பாடியதன் வாயிலாகச் சமுதாயப் பயன்பாட்டுக்கு ‘விருட்சம்’ கவிதைகள் உதவியுள்ளன.
தமிழ்ச் சமூக உருவாக்கமும் சங்க இலக்கியமும் - ச. லோகேஷ்
நிறுவன விவரம்
நிறுவனத்தின் பெயர் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்
நகரம் சென்னை
மாவட்டம்
அஞ்சல் குறியீட்டு எண்
ஆய்வாளர் விவரம்
ஆய்வாளர் பெயர் ச. லோகேஷ்
நகரம் சென்னை
ஆய்வு விவரம்
தலைப்பு தமிழ்ச் சமூக உருவாக்கமும் சங்க இலக்கியமும்
பதிவு நாள் 2014
நெறியாளர் தி. மகாலட்சுமி பல்கலைக்கழகம்
துணை நெறியாளர் தி. மகாலட்சுமி பல்கலைக்கழகம்
ஆய்வு விளக்கம்
முன்னுரை
ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட தொன்மையைக் கொண்டது தமிழ்ச சமூகம். தமிழ்ச சமூகத்துடன் ஒப்புமையுடைய தொன்மையான சமூகமான அது கிரேக்கம். இன்று இல்லை வேறு விதமாக மாறிவிட்டது. தமிழ்ச் சமூகம் இன்றளவும் நிலைத்து நிற்கின்றது. இவ்வாறு காலத்தால் தமிழ்ச் சமூகம் அழிந்துவிடாது நிலைபெற்று இருப்பதற்குக் காரணம் அது பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல் என்ற கொள்கையின் படி தன்னைக் காலந்தோரும் மாற்றக் கொண்டு வந்துள்ளதால் ஆகும்.
கருதுகோள்
தமிழர் வாழ்வை அகம், புறம் என்பதாகப் பகுத்துப் பார்க்கின்றனர். சங்க காலம் தலைமக்களால் ஆனது. சங்க காலத்தால் தலை மக்களிடம் அகவயமான பண்பு மேலோங்கியது. இதன் காரணமாகச் சங்ககால மக்களின் குடும்ப வாழ்வும் புறத்தில் பேரரசை உருவாக்க வேண்டுமென்ற இலட்சியமும் சீர் குலைந்து சங்கச் சமூகம் வீழ்ச்சியை அடைந்து இச்சிக்கலைப் புரிந்து கொண்ட சான்றோர் புறவயமான நிலையினைக் கருத்தில் கொண்டு அகத்தினை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும் என்று தலைமக்களுக்கு அறிவுறுத்தினார்.
ஆய்வு அணுகுமுறை
விளக்கமுறை, பகுப்பாய்வு, சமூகவியல் முறை
ஆய்வுப் பகுப்பு
இவ்வாய்வேடு, 1. தலைமக்களும் சங்கச் சமூகமும் 2. நகர நாகரிகமும் சங்கச் சமூகமும் 3. குடும்பமும் தமிழ்ச் சமூக உருவாக்கமும் 4. தொழிலும் தமிழ்ச் சமூக உருவாக்கமும் 5. அரசும் தமிழ்ச் சமூக உருவாக்கமும் 6. தமிழ்ச் சமூக உருவாக்கமும் அதன் பரிமாணங்களும். ஆகிய இயல்களைக் கொண்டது.
முடிவுரை
சங்க காலமானது நகர நாகரிகத்தை அடிப்படையாகக் கொண்டது. நாகரிகம், பண்பாடு எனும் இரண்டும் வெவ்வேறு பொருளைத் தருவன. நாகரிகம் என்பது மக்கட் பொருட்களைப் பயன்படுத்தி வாழ்க்கையை எளிமையாகவும் வசதியுடையதாகவும் மாற்றிக் கொள்வதைக் குறிக்கின்றது. பண்பாடு ஒரு மக்கள் பிற மக்களிடம் பழகும் தன்மையைக் குறிக்கின்றது. சங்கச் சமூகம் குடும்ப வாழ்வைக் களவு, கற்பு என்பதால் பகுத்துப்பார்க்கின்றது. தலைவன் தலைவி இடையே நிகழும் களவு, கற்பு என்னும் உலகியல் வாழ்வை நாடக வழக்கு என்ற நிலையில் சங்கப் பாடல்கள் எடுத்துரைக்கின்றன. களவு வாழ்வில் பொய்யும் வழுவும் தோன்றியதன் காரணமாக 'கணரம்' எனும் கற்பு மணம் தோற்றுவிக்கப்பட்டது. 'கரணம்' எனும் மனமுறையினைத் தொடர்ந்து பெற்றோர் பார்த்துத் தலைவனுக்கும் தலைவிக்கும் மனம் முடித்து வைக்கும் ஏற்பாடடு மணம் தோண்றியது. ஏற்பாட்டு மணத்தில் தலைவியின் பழைய காதல் உணர்வுகள் கேள்விற்கு உட்படுத்தப்பட்டது.
1