ஆய்வு விவரம் தேடல்
ஊடகங்களில் மொழிப்பயன்பாடும் சமுதாயத் தாக்கமும். - து. ஜானகி
பல்கலைக்கழக விவரம்
பல்கலைக்கழக பெயர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்
நகரம் மதுரை
மாவட்டம்
அஞ்சல் குறியீட்டு எண்
ஆய்வாளர் விவரம்
ஆய்வாளர் பெயர் து. ஜானகி
நகரம் மதுரை
ஆய்வு விவரம்
தலைப்பு ஊடகங்களில் மொழிப்பயன்பாடும் சமுதாயத் தாக்கமும்.
வகைமை மக்கள்தகவல் தொடர்பியல்
துணை வகைமை தகவல் தொடர்பியல்
பதிவு நாள் 2005
நெறியாளர் வீ. ரேணுகாதேவி
துணை நெறியாளர் வீ. ரேணுகாதேவி
ஆய்வு விளக்கம்
முன்னுரை:-
ஊடகங்களில் மொழிப்பயன்பாடும் சமுதாயத் தாக்கமும்’ என்னும் தலைப்பை ஆய்வுப் பொருளாகக் கொண்டுஇவ்வாய்வுஅமைகின்றது.
ஆய்வுக் கருதுகோள்
ஊடகங்களில் பயன்படுத்தப்படும் தமிழ் மொழியின் மையக் கூறுகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அம்மாற்றங்கள் தமிழ் மொழியின் வளர்ச்சிக்குத் தடையாக அமையுமா? என ஆராய்வது கருதுகோளாக அமைகின்றது. ஒவ்வொரு மொழிக்கும் என்று தனியான பண்பாட்டுக் கூறுகளும், கட்டமைப்பும் உண்டு. அவ்வாறு இருந்தால்தான் அது தனிப்பட்ட மொழி என நிலைநாட்டிக்கொள்ள முடியும். ஆனால் தமிழ்மொழியின் தனித்தன்மையைச் சிதைக்கும் மொழியினை த்தொலைக்காட்சி பயன்படுத்தினால் சமுதாயத்தில் கேடுகளை உண்டாக்குமா,என்பது அடுத்த கருதுகோளாக அமைகின்றது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்படும் மொழி வேறுபட்டுக் காணப்படுவதால் செய்யுள்மொழி, கவிதைமொழி, பத்திரிகை மொழி என இருப்பது போன்று தொலைக்காட்சிக்கெனத் தனிமொழி ஒன்று உருவாகுமா, என்பதை ஆராய்வது பிறிதொரு கருதுகோளாக அமைகின்றது.
ஆய்வு அணுகுமுறைகள்:-
இவ்வாய்வில் விளக்கமுறை ஆய்வு, ஒப்பீட்டுமுறை ஆய்வு, மதிப்பீட்டு முறை ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஆய்வுப் பகுப்பு:-
இவ்வாய்வு முன்னுரை, முடிவுரை உள்ளடக்கி ஆறு இயல்களைக் கொண்டுள்ளது.அவை 1. முன்னுரை 2. நிகழ்ச்சிகளின் வகைப்பாடு 3. மொழிப்பயன்பாடு 3.1 நிகழ்ச்சிகளில் மொழிப்பயன்பாடு 3.2 விளம்பரங்களில் மொழிப்பயன்பாடு 4. பிற மொழிப் பயன்பாடு 4.1 நிகழ்ச்சிகளில் பிறமொழிப் பயன்பாடு 4.2 விளம்பரங்களில் பிறமொழிப் பயன்பாடு 5. சமுதாயத் தாக்கம் 5.நிகழ்ச்சிகளில் ஏற்படும் சமுதாயத் தாக்கம் 5.2 விளம்பரங்களில் ஏற்படும் சமுதாயத் தாக்கம் 6. முடிவுரை என்பனவாகும்
முடிவுரை:-
ஊடகங்களில் மொழிப்பயன்பாடு என்னும் ஆய்வு மிகப் பரந்துபட்ட ஒன்றாகும். இன்றைய சூழலில் மக்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் வீட்டுத் தேவைகளில் ஒன்றாக ஊடகங்கள் அமைந்துள்ளன. இவ்ஊடகங்கள் மக்களிடையே பல தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன என்பது பெரும்பான்மையினரால் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மை. இன்று தொலைக்காட்சி வீட்டிலுள்ளவர்களைத் தனித்தனித் தீவுகளாக்கி வருகின்றன. மக்களிடையே பண்பாட்டுத் தாக்கத்தை ஏற்படுத்துவது மட்டுமல்லாது அவர்கள் பயன்படுத்தும் மொழியமைப்பிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றது. ஊடகமொழியின் ஒரு பிரிவாக விளம்பர மொழியும் வளர்ந்து வருகின்றது. உரைநடைத் தமிழ், நாடகத்தமிழ் போன்று ஊடகத்தமிழ் என்ற ஒரு வகை நடை உருவாகிக் கொண்டிருக்கின்றது. இது பற்றிய ஆராய்ச்சி இனிவரும் ஆய்வாளர்களுக்கு நல்ல ஒரு ஆய்வுக்களமாக அமையும் என்பதில் ஐயமில்லை.
தமிழில் இஸ்லாமியச் சதக இலக்கியங்கள் - உ ஜெ. அலி பாவா
கல்லூரி விவரம்
கல்லூரி பெயர் ஜமால் முகம்மது கல்லூரி(தன்னாட்சி)
பல்கலைக்கழக பெயர் பாரதிதாசன் பல்கலைக்கழகம்
நகரம் திருச்சிராப்பள்ளி
மாவட்டம்
அஞ்சல் குறியீட்டு எண் 620 020
ஆய்வாளர் விவரம்
ஆய்வாளர் பெயர் உ ஜெ. அலி பாவா
நகரம் திருச்சிராப்பள்ளி
ஆய்வு விவரம்
தலைப்பு தமிழில் இஸ்லாமியச் சதக இலக்கியங்கள்
வகைமை சிற்றிலக்கியங்கள்
துணை வகைமை கோவை
பதிவு நாள் 2006
நெறியாளர் அ ஆலிஸ்
துணை நெறியாளர் அ ஆலிஸ்
ஆய்வு விளக்கம்
முன்னுரை
'தமிழில் இஸ்லாமியச் சதக இலக்கியங்கள்" என்பது ஆய்வுத் தலைப்பாகும்
கருதுகோள்கள்
1 தமிழ்ச் சதக இலக்கியப் படைப்புக்களுள் இஸ்லாமியச் சதங்கள் குறிப்பிடத் தக்க இடத்தைப் பெறுகின்றன 2 தமிழ்ச் சதக நூல்களின் மரபுகளோடு இஸ்லாமியச் சதக நூல்கள் பெரும்பான்மை ஒட்டியும் சிறுபான்மை உளழ்ந்தும் அமைகின்றன 3 இஸ்லாமியச் சதக இலக்கியங்கள் பல சூபித்துவக் கொள்கையை முக்கியமான கருத்தாக எடுத்துப் பேசுகின்றன 4 இஸ்லாமியச் சதகங்களில் இடம் பெற்றுள்ள இஸ்லாமியச் சிந்தனைகள் திருக்குர் ஆன் ஹதீஸ் (நபிமொழி) ஆகியவற்றின் அடிப்படையில் அமைகின்றன 5 இஸ்லாமியச் சதக ஆசிரியர்களின் சமுதாயப் பார்வை தமிழ்ச் சமுதாயம் சார்ந்ததாயும் குறிப்பாக இஸ்லாமியச் சமுதாயம் சார்ந்ததாயும் அமைகின்றன
ஆய்வு அணுகுமுறை
இவ்வாய்வு வரலாற்றுமுறை ஆய்வாகவும் ஒப்பீட்டுமுறை ஆய்வும் பகுப்பு முறை ஆய்வும் விளக்கமுறை ஆய்வாகவும் அமைந்துள்ளது ஆய்வுப்பகுப்பு இவ்வாய்வேடு முன்னுரை முடிவுரை நீங்கலாக 1 சதக இலக்கியப் படைப்புகளுள் இஸ்லாமியச் சதக இலக்கியங்கள் 2 இஸ்லாமிய மார்க்க வரலாறு 3 இறையியல் 4 இஸ்லாமிய வாழ்வியல் நெறி 5 சமுதாயச் சிந்தனை
முடிவுரை
இஸ்லாமியச் சதக இலக்கியங்கள் உருவ அடிப்படையில் தமிழ்ச் சதகங்களையே பின்பற்றியுள்ளன உள்ளடக்க அடிப்படையில் இஸ்லாமிய மார்க்க அறிவையும் அறக்கருத்துக்களையும் கூறும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ளன
இசைமேதை டாக்டர் எஸ். இராமநாதன் - என். பாரதி
நிறுவன விவரம்
நிறுவனத்தின் பெயர் ஸ்ரீ ஸத்குரு ஸங்கீத வித்யாலயம்
நகரம் மதுரை
மாவட்டம்
அஞ்சல் குறியீட்டு எண் 625 002
ஆய்வாளர் விவரம்
ஆய்வாளர் பெயர் என். பாரதி
நகரம் மதுரை
ஆய்வு விவரம்
தலைப்பு இசைமேதை டாக்டர் எஸ். இராமநாதன்
பதிவு நாள் 2008
நெறியாளர் லதா வர்மா
துணை நெறியாளர் லதா வர்மா
ஆய்வு விளக்கம்
முன்னுரை:-
‘இசைமேதை டாக்டர் எஸ். இராமநாதன்’ என்பது ஆய்வுத் தலைப்பாக அமைக்கப்பட்டுள்ளது.
ஆய்வு அணுகுமுறை:-
இவ்வாய்வில் விளக்கமுறை ஆய்வு அணுகுமுறை பின்பற்றப்பட்டுள்ளது
ஆய்வுப் பகுப்பு:-
இவ்வாய்வேடு முன்னுரை, முடிவுரை நீங்கலாக ஆறு இயல்களைக் கொண்டது.அவை 1. எஸ். ஆரின் வாழ்க்கை வரலாறு 2. ஆசிரியப் பெருமக்கள் 3. நல்லாசிரியர் 4. ஆழ்ந்த ஆராய்ச்சியாளர் 5. தேர்ந்த இசைக்கலைஞர் 6. சிறந்த வாக்கேயக்காரர். என்பனவாகும்
முடிவுரை:-
சிறந்த பண்பாளராக, மனிதநேயம் மிக்கவராக, அறிவாற்றல் மிக்கவராக, அன்புள்ளம் கொண்டவராக, நல்லாசிரியராக, தேர்ந்த இசைக்கலைஞராக, ஆழ்ந்த ஆராய்ச்சியாளராக வாக்கேயக்காரராகத் திகழ்ந்த எஸ். ஆரை ‘இசைமேதை’ என்று உலகம் போற்றுவது, இசையைப் போற்றுவது போல் ஆகும். இசைக்காக இசையென்றே வாழ்ந்து காட்டிய சிறந்த மனிதரின் நினைவுகள், அவருடன் பழகியவர்களுக்கும் அவரை அறிந்தவர்களுக்கும், அவர்களுடைய நெஞ்சங்களிலிருந்து என்றும் நீங்காதவை. ஆலமரம் போல் அவருடைய புகழ் எங்கும் பரந்து உறுதியுடன் நிலைத்து நிற்கும்.
1