ஆய்வு விளக்கம்
மறை அருவியல் தொடக்க காலத்தில் வெறும் சமயப்பரப்புதல் பணிக்கான கட்டுரைகள் மட்டுமே வெளிவந்தன. ஆனால் கி.பி. 1987 ஆம் ஆண்டுற்குப் பிறகு விடுதலையை பரப்பியது தென் அமெரிக்காவில் தோன்றி உருவெடுத்த விடுதலை இறையியல், நம்நாட்டுச் சூழலமைவிற்கு ஏற்ப தோன்றி வளர்ந்து விடுதலை இறையியல் என்பது மக்களினம் வாழும்போது ஏற்படுகின்ற சிக்கல்களில் இருந்து பிரச்சினைகளில் இருந்து நெருக்கடி நிலைகளில் இருந்து விடுதலையடைய உருவெடுக்கின்றது.
இவ்வாய்வில் சமூகப் பகுப்பாய்வு அணுகுமுறை, விளக்கவியல் அணுகுமுறை, மானுடவியல் அணுகுமுறை, வரலாற்றுயியல் அணுகுமுறையும் எடுத்தாளப்பட்டுள்ளது.
மறை அருவியில் வெளிவந்த கட்டுரைகள் சமூக விடுதலையைக் கொணர்ந்திருக்கின்றன. அவ்விடுதலை ஒரு படித்தான சமூகத்தை மாற்றி அமைக்கின்றதா? அல்லது சமூக விடுதலைக்குக் காரணியாகவாவது அமைந்துள்ளதா? என்பதே முதன்மைக் கருதுகோள்.
மறை அருவியின் கட்டுரைகளால் கிறித்துவத் திருச்சபையும் திருச்சபையர்களும் மாற்றம் பெற்றுச் சமூக வளர்ச்சியான மாற்றத்தில் பங்கு கொடுத்துள்ளனரா? என்பது இரண்டாவது கருதுகோள்.
தென் அமெரிக்காவில் தோன்றிய விடுதலை இறையியல் நம் நாட்டிற்குமாக உட்கொண்டு செயல்பட்டதில் மனித சமூகம் மேம்பட்டுள்ளதா? என்பது மூன்றாவது கருதுகோள்.
‘குழந்தையும் தெய்வமும் கொண்டாடும்’ இடத்திலே என்பர். ஆனால் இன்றைக்குப் பல குடும்பங்களில் பெற்றோர்கள் உழைக்காமல். அல்லது அவ்வுழைப்பிற்கு ஏற்ற ஊதியமின்மையால் குழந்தைத் தொழிலாளர்களை உருவாக்குகின்றனர் என்பதே நான்காவது கருதுகோள்.
இவ்வாய்வேடு முன்னுரை, முடிவுரை நீங்கலாக ஏழு இயல்களைக் கொண்டுள்ளது.
1. மறைஅருவியின் தோற்றம் வளர்ச்சி
2. இறையியல் விடுதலை இறையியல் ஒரு விளக்கம்
3. இயேசு பெருமானின் விடுதலை உள்ளம்
4. குழந்தைத் தொழிலாளர் விடுதலை இறையியல்
5. சாதிய தலித் விடுதலை இறையியல்
6. .
7. சமூக –கல்வி – பொருளாதாரத் தடைகளிலிருந்து விடுதலை
கடந்த 2000 ஆண்டுகளில் சமயத்தின் பெயரால் கிறித்துவர்கள் செய்துவந்த பாவங்கள். வண்செயல்கள், பிறசமயத்தைப் பின்பற்றுவோர்பால் காட்டிய விரோதத்திற்காக குற்றங்களுக்காக, திருச்சபையின் தவறுகளுக்காக 12-3-2000 அன்று மன்னிப்புக் கேட்டார். திருத்தந்தை இரண்டாம் ஜான்பால், இதுவரையில் வேறு எந்த திருத்தந்தையர்களும் பொது மன்னிப்பு கேட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. திருத்தந்தையின் இந்த முன்மாதிரியான செயலை ஒவ்வொரு கிறித்துவர்களும், அருட்பணியாளர்களும் பின்பற்றும் போது தான் மெய்யான விடுதலை இறையியல்களின் கருத்துருவாக்கம் மெய்பிக்கப்படும் என்பதே உண்மை. அப்போது தான் கிறித்துவ திருச்சபை அகில உலக சமூகத்தின் மீது அக்கறைக் கொண்டுள்ளது என உணரமுடியும்.